அதீத அன்பு.. மனைவியின் சமாதி மேல் வீடு கட்டிய கணவன்

62பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் துறையூரில் மனைவி மீது கொண்ட தீராத காதலால் அவரது சமாதியுடன் கூடிய வீட்டை கணவர் பழனி கட்டியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி, பழனியின் மனைவி செல்வி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடலை பூர்வீக நிலத்தில் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். தனது மனைவி மீது கொண்ட அதீத அன்பு காரணமாக மனைவியின் சமாதியின் மேலேயே பழனி புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தந்தி