சொத்துவரி உயர்வுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டு சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் இபிஎஸ். உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது வாய் மூடி அமைதியாய் இருந்தவர் இபிஎஸ்" என்று தெரிவித்துள்ளார்.