மழை நீரானாது பாறைகள், மலைகள் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. அப்போது, பாறைகளில் உள்ள சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் உப்புகளும் கடலில் சேர்கிறது. கடலில் சேர்ந்த பின்னர் நீர்மட்டம் வெப்பத்தால் ஆவியாகி மேலே செல்கிறது. உப்பு கடலிலேயே தங்கி விடுகிறது. இதன் காரணமாகவே கடல் உப்புத்தன்மையுடன் இருக்கிறது. அதிக மழைப் பொழிவு, நன்னீர் கலப்பது ஆகிய காரணத்தினால் உப்பின் தன்மை கடலில் அதிகமாகாமல் சமநிலையுடன் இருக்கிறது.