தமிழிசையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

78538பார்த்தது
தமிழிசையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கும் தமிழிசை சவுந்தரராஜனின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழிசை பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1.57 கோடி, கணவர் பெயரில் மொத்தம் ரூ.3.92 கோடி அசையும் சொத்துகள், மகள் பெயரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள், 4 கார்கள் இருப்பதாகவும், தனது பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், கணவர் சவுந்தரராஜன் பெயரில் 13.70 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி