உலக சுற்றுசூழல் தினம் கொண்டாட்டம்

73பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் வழிகாட்டுதலின் படி தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முத்துசாராதா அவர்கள் தலைமையில் உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வில் உரையாற்றும்போது போது முத்துசாராதா அவர்கள் கூறியதாவது ”இயற்கை நமக்கு தீங்கு விளைவிக்கவில்லை, நாம் தான் இயற்கையை பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்றும், இனங்களை அழித்துவிட்டு தினங்களை கொண்டாடி வருகிறோம்” என்று அறிவுறுத்தினார். அதன்பின்பு மாற்று சமரச தீர்வு மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

மேலும் கூடுதல் மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான், குடும்ப நல நீதிபதி விஜயகுமார், SC/ST சிறப்பு நீதிபதி முரளிதரன், POCSO சிறப்பு நீதிபதி வேல்முருகன், மகிளா நீதிபதி சரண், முதன்மை சார்பு நீதிபதி மீனாட்சி, கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா, கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்1 பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்3 ஆனந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் சௌமியா மேத்யு, வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் ஊழியர்கள் மரங்கன்றுகளை நட்டனர்.

தொடர்புடைய செய்தி