மாவட்டத்தில் 2. 86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

53பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் 64 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 11 மதுக்கடைகள் தர்மபுரி நகர் பகுதியில் உள்ளன. 53 மதுக்கடைகள் கிராமப்புற பகுதிகளில் உள் ளன. இந்த 64 கடைகள் மூலம் தினசரி 2. 50 கோடி வரை மதுவிற்பனை செய்யப்படு கிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் 3. 50 கோடி முதல் 4 கோடி வரையிலும் மது விற்பனை செய்யப்படும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது 3. 50 கோடிக்கு மது விற் பனை நடந்தது. இந் நிலையில், நேற்று ஆங்கில புத்தாண் டையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் 2. 86 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

தினசரி விற்பனையை விட சற்று அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு மது விற்பனை ஆகாததால், அதிகாரிகள்அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி விபத்து நடக்காமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் தற்கா லிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக் கூடாது, தலைகவசம் அணியாமல் டூவீலர் ஓட்டக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி