தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீசர் அப்டேட்

583பார்த்தது
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீசர் அப்டேட்
தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.