கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இரவு மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.