கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள் பெய்த மழை மற்றும் சூறைக் காற்றும் வீசியதால் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள வழிசோதனைப்பாளையம், ஒதியடிக்குப்பம், சமட்டிக்குப்பம், புலியூர், ராமாபுரம், கீரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.