ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி

53பார்த்தது
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி
கோவை

தி பிட்ச் - ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி.

கோயம்புத்தூர் மக்களை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோரும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டு ஒரு வார விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகள் பொழுது போக்கு அம்சங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பிட்ச், முதலீட்டாளர்கள், இங்குபேட்டர்கள், ஆக்சிலேட்டர்கள் மற்றும் ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் மத்தியில் தொழில் முனைவோர் உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டும் கோவையைச் சேர்ந்த வளரும் தொழில் முனைவோருக்கு ஒரு தளமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எப்படி முதலீட்டார்களிடம் தங்கள் நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்பை குறித்து வெளிப்படுத்த வேண்டும் என்பதை குறித்து பயிற்சி தர பல்வேறு தொழில் நிறுவனங்கள் உதவியது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான விருதுகள், சமூக தாக்க விருது, சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தன்மை விருது வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி