தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், 1800 425 5901 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.