தெற்கு ரயில்வே வருமானம் ₹12020 கோடி

1542பார்த்தது
தெற்கு ரயில்வே வருமானம் ₹12020 கோடி
தெற்கு ரயில்வேயின் ஆண்டு வருமானம் 2023-24ம் நிதியாண்டில் ரூ. 12020 கோடி ஆகும். இது முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட 10% அதிகம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: 2023-24ம் நிதியாண்டில், தெற்கு ரயில்வே அனைத்து பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆண்டு மொத்த வருவாய் என்பது ரூ. 7151 கோடி பயணிகள் கட்டண வருவாய், ரூ. 3674 கோடி சரக்கு கட்டண வருவாய் மற்றும் இதர வருவாய் உள்பட தெற்கு ரயில்வேயின் ஆண்டு மொத்த வருவாய் 2023-24 நிதியாண்டில் 12020 கோடி ரூபாய். இது முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட 10% அதிகரிப்புடன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

2023-24ம் ஆண்டில் சென்னை-கோவை- சென்னை, நெல்லை-சென்னை- நெல்லை, விஜயவாடா- சென்னை- விஜயவாடா, கோவை- பெங்களூரு கான்ட்- கோவை, திருவனந்தபுரம்- ஆகிய 8 புதிய ஜோடி வந்தே பாரத் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

காசர்கோடு- திருவனந்தபுரம் (கோட்டயம் வழியாக), திருவனந்தபுரம்-காசர்கோடு- திருவனந்தபுரம் (ஆலப்புழா வழியாக), மங்களூரு-மட்கான்- மங்களூரு, மற்றும் சென்னை-மைசூர்- சென்னை, திருவனந்தபுரம் – காசர்கோடு (ஆலப்புழா வழியாக) வந்தே பாரத் சேவைகள் – மங்களூரு சென்ட்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

டேக்ஸ் :