சென்னையில் ரூ. 2. 50 கோடி பறிமுதல்

85பார்த்தது
சென்னையில் ரூ. 2. 50 கோடி பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, சென்னை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு தருவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் வீடு, கொண்டித்தோப்பு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்ததொழிலதிபர் வீடு மற்றும் புரசைவாக்கம், கொரட்டூர், விருகம்பாக்கத்தில் சிலரது வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை கொரட்டூரில் ஒரு தொழிலதிபர் வீட்டில் கணக்கில் வராத ரூ. 2. 50 கோடி நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி