சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, "தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க கடந்த மே 27ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை ஒரு பெண் உள்பட 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.