இன்று 47வது புத்தக காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

51பார்த்தது
இன்று 47வது புத்தக காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
பபாசியின் 47-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனத்தில் இன்று (ஜன. 3) தொடங்கி, 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8. 30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8. 30 மணி வரையும் நடத்தப்படும்.

தொடர்புடைய செய்தி