ஜியோ சிம் விற்பனைக்கு தடை

58பார்த்தது
ஜியோ சிம் விற்பனைக்கு தடை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஜியோவிற்கு சிக்னல் கிடைப்பதில்லை என பலமுறை புகாரளித்தும் ஜியோ நிறுவனம் அதை சரிசெய்யவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதையடுத்து, சிக்னல் சேவையை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் அங்கு சிம் கார்டுகளை விற்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், 30 நாட்களுக்குள் புகார்தாரருக்கு தலா ரூ.20,000 நஷ்ட ஈடு மற்றும் ரூ.10,000 வழக்கு செலவுத் தொகை வழங்கவும் ஜியோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.