ஏப்ரல் 26ஆம் தேதி வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை

72பார்த்தது
ஏப்ரல் 26ஆம் தேதி வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை
மக்களவையின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உட்பட வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.

இரண்டாம் கட்டமாக, அவுட்டர் மணிப்பூரின் கலவரம் பாதித்த பகுதியில் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி