விவசாயி சின்னம் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

74பார்த்தது
விவசாயி சின்னம் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக கர்நாடகாவை சேர்ந்தவர் கூறியுள்ளார். முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் நாதகவுக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட போகிறோம் என்றார்.

தொடர்புடைய செய்தி