வீட்டை சுற்றி நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் பூச்சி, கொசு, தவளை வரும். அதை சாப்பிட பாம்புகள் வரும். அதே போல தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மாடியில் இருந்து பார்த்தால் பாம்புகள் நீச்சலடிப்பதை காணலாம். தண்ணீரில் வீட்டுக் குப்பையை கொண்டுபோய் கொட்டினால் மீந்த உணவுகளைச் சாப்பிட எலிகள் வரும். அந்த எலிகளை சாப்பிட பாம்புகள் வரும். குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வருவதற்கு இதுவே காரணம்.