இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த (77) வயது முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் அருகே அரசரடி பேருந்து நிறுத்தம் முன்பாக முதியவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் செட்டியார்பட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்த (77) வயதுடைய முதியவர் மலைக்கண்ணன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டினை விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 420/- கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.