கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த பிப். 14 அன்று ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் ஆண்டவரின் 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பின், மார்ச் 23 அன்று டிஸ்சார்ஜ் ஆகி அவர் வாடிகனுக்குத் திரும்பினார். இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்று காலை 7.35 மணியளவில் அவர் உயிரிழந்தார் என வாடிகன் அறிவித்துள்ளது.