விமலின் ‘மா.பொ.சி’ திரைப்படம் பெயர் மாற்றம்

80பார்த்தது
விமலின் ‘மா.பொ.சி’ திரைப்படம் பெயர் மாற்றம்
விமல் நடித்துள்ள ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான “மா.பொ.சி” திரைப்படத்திற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், ‘சார்’ என்ற என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம். படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.