அதிமுக சார்பில் கிரிக்கெட் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

71பார்த்தது
கள்ளக்குறிச்சி, மாவட்டம், முகையூர் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஏற்பாட்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்த நாளை ஒட்டி 46 அணிகள் கலந்து கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி திருக்கோவிலூர் பகுதியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக 15, 000ம், இரண்டாவது பரிசாக மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் ₹. 10, 000ம், மூன்றாவது பரிசாக மாவட்ட கழக பொருளாளர் ராமச்சந்திரன் ₹. 7000 ரூபாயை வெற்றி பெற்ற அணிகள் வழங்கினர். உடன் இந்த நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன், நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பழனி, சந்தோஷ், இளங்கோவன், தனபால், ராமலிங்கம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :