விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் 14 வக்பு நிறுவனங்களுக்கு பெரு மராமத்து மானியம் காசோலையை நிர்வாகிகளிடம் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் இன்று (செப்டம்பர் 21) வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத் தலைவர்கள், செஞ்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.