விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி ஏரிக்கரையில் உதவும் உள்ளங்கள் தன்னார்வலர் அமைப்பின் சார்பில் பனைவிதை நடும் விழா நேற்று (செப்.,29) நடந்தது. இதன் நிறுவனர் ஜான் சத்தியசீலன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம். எல். ஏ. , பனை விதை நடுவதை துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தி.மு.க. மாவட்ட விவசாய அணி தலைவர் கணேசன், தொண்டரணி பாஷா, உதவும் உள்ளங்கள் உறுப்பினர்கள் அறிவழகன், அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.