வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருந்தகத்தில் உள்ள அறையை பார்வையிட்டார். மேலும் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கர்ப்பிணி தாய்மார்களிடம் சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.