ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி மூன்று பேர் படுகாயம்

62பார்த்தது
ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி மூன்று பேர் படுகாயம்
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சார்ந்த அன்பழகன். இவர் நேற்று (செப் 29) தனது ஆட்டோவில் மூன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மண்டலவாடி பகுதியில் இருந்து குன்னத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த நடராஜ் உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி