ஆந்திர மாநிலம் மல்லானூர் பகுதியைச் சார்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் (வயது 44) என்பவர் மகனுக்கு துணியை வாங்கிக் கொண்டு திருப்பத்தூரில் இருந்து மல்லானூருக்கு செல்ல மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.
நேற்று (செப் 29) பாட்டாளி நகர் பகுதியை சார்ந்த பழனி (46) என்பவர் மேம்பாலத்தின் மீது நேருக்கு நேர் இருவரும் சென்று கொண்டிருந்தனர். இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.