இன்றைய ராசிபலன் 05-03-2023 | வீடியோ

129900பார்த்தது
மேஷம்: கலைச் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பரின் உதவியால் மனம் நிம்மதி அடையும். கருவுறுதலை எதிர்பார்க்கலாம். தொழில் விஷயங்களில் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவர். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து எண்ணி கவலை கொள்வீர்கள். அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்: உடல்நலக் கோளாறுகளில் கவனம் கொள்ளுங்கள். தம்பதியரிடையே மகிழ்ச்சி ஏற்படும். மூதாதையர் சொத்துக்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நடனம் மற்றும் இசை கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்ள முயற்சிப்பவர்களின் விருப்பம் நிறைவேறும்.

மிதுனம்: பொறியியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நிலம் வாங்க, விற்க முயற்சிப்பவர்களுக்கு சாதகமான நேரம். தடைப்பட்டிருந்த பல விஷயங்கள் நீங்கும். புதிய நட்பு உறவுகளால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். சகோதரர்களுடன் சேர்ந்து புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நேரம்.

கடகம்: நீண்ட நாட்களாக முயன்று வந்த இடமாற்றத்திற்கான உத்தரவு கிடைக்கும். கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் தொழில் ரீதியாகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். நிதித்துறையில் கடுமையான நிலைப்பாடுகள் எடுக்கப்படும். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்கள் விரும்பத்தகாத அனுபவங்களை அனுபவிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். விழாக்களில் பங்கேற்பீர்கள். வீடு கட்ட நினைப்பவர்களுக்கு தடைகள் ஏற்படும். தாய்க்கு உடல் உபாதைகள் ஏற்படும். நிலம் வாங்கவும் விற்கவும் வாய்ப்பு. கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இடையூறுகள் ஏற்படும். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.

கன்னி: பயணங்கள் தேவைப்படும். நிதி ஆதாயம் இருக்கும் ஆனால் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிறப்பு ஆடைகள் பரிசாக வழங்கப்படும். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களால் திடீர் அலைச்சல் ஏற்படலாம்.

துலாம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவிடப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆரோக்கியத்திற்கு நல்ல நேரம். உத்தியோகத்தில், நீங்கள் எதிர்பார்க்காத சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். வணிகத் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் நிதிக் கடமைகள் அதிகரிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்: அன்புக்குரியவர்களால் மனவேதனை ஏற்பட வாய்ப்பு. மாணவர்களுக்கு நடனம் மற்றும் இசை கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்புவோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். வணிகத் துறையில் பணிபுரிபவர்கள் பல சூழ்நிலைகளை புத்திசாலித்தனமாக கையாள முயற்சிக்க வேண்டும்.

தனுசு: நிலம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். புண்ணிய ஆலயங்களுக்குச் செல்வீர்கள். அவதூறு வர வாய்ப்பு இருப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற எண்ணங்கள் மனதைக் குழப்பிக் கொண்டே இருக்கும். திருமண சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மகரம்: மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். புதிய ஆடைகள் பரிசாக வழங்கப்படும். எளிதில் கோபப்பட்டு கடுமையாக நடந்து கொள்வார்கள். வருமானத்தை விட செலவு அதிகமாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்: வெளிநாட்டில் உள்ள உறவினர்களால் நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த பணம் கிடைகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி தேவையில்லாமல் யோசித்துக்கொண்டே இருப்பார்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மீனம்: வெளியூர் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு தடைகள் ஏற்படும். கடின உழைப்பால் பொருளாதார ஆதாயம் உண்டாகும். நிலையற்ற மனநிலையில் இருப்பார்கள். எதிரிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் கல்விக்காக அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். செயல் துறை செழிக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி நிலவும். சுப காரிய பேச்சுகள் சாதகமான சூழலை உருவாக்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி