இன்றைய ராசிபலன் 12-02-2024

80பார்த்தது
இன்றைய ராசிபலன் 12-02-2024
மேஷம்: திட்டமிட்ட பணிகளில் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்: மனதில் நினைத்த காரியம் கைகூடிவரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும்.

மிதுனம்: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதால் மாற்றம் உண்டாகும். தவறிப்போன சில முக்கியமான பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். நிர்வாகத் துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

கடகம்: பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

சிம்மம்: மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்துச் செயல்படவும். புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் நேர்மறை எண்ணங்களோடு செயல்படவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கன்னி: உறவினர்கள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

துலாம்: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தனவருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும்.

விருச்சிகம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும்.

தனுசு: செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உறவினர்களிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

கும்பம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

மீனம்: செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். மறைமுகமான நெருக்கடியால் சில மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

தொடர்புடைய செய்தி