இன்றைய ராசிபலன் (23/01/2024)

58976பார்த்தது
இன்றைய ராசிபலன் (23/01/2024)
மேஷம்: இன்று நடப்பவை அனைத்தும் சுமுகமாக இருக்கும்.உங்கள் இலக்குகள் நிறைவேறுவதைக் காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களிடம் ஆற்றல் மிகுந்து காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். ரிஷபம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று தைரியம் குறைந்து காணப்படும். இன்று பண வளர்ச்சி சாதகமாக இருக்காது. இன்று ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இன்று தோல் சம்பந்தமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். மிதுனம்: இன்று உங்களிடம் காணப்படும் அவநம்பிக்கை உங்கள் ஆற்றலை குறைக்கும். இன்று பண வறவிற்கான அதிர்ஷ்டமும் குறைவு, மேலும் பணத்தை கவனமுடன் கையாள வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கடகம்: உங்கள் இலக்குகளை முடிப்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் இன்று அமையாது. இன்று பண வரவு குறைந்து காணப்படும். பணத்தை கவனமுடன் கையாள வேண்டும். உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். சூடான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். சிம்மம்: இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய பரந்த நோக்கு உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்று பண வரவு அதிகரித்து காணப்படும். உங்களிடம் உள்ள பணம் உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். கன்னி: இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். இன்றைய நாளை நீங்கள் உங்கள் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று நிதிநிலை சிறப்பாக காணப்படும். உங்கள் சொத்துக்களை விரிவு படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். துலாம்: உங்கள் செயல்களை ஆற்றுவதில் இன்று சில தடங்கல்கள் ஏற்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற மற்றும் வீணான செலவுகளால் மனதில் கவலை ஏற்படும். செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். முதுகு வலிக்கு வாய்ப்புள்ளது. விருச்சிகம்: இன்று நன்மை தீமை இரண்டும்கலந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இன்று தேவையற்ற செலவினங்கள் அதிகமாக காணப்படும். உரிய நேரத்தில் உணவு உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். தனுசு: இன்று சுமுகமான நாளாக இருக்கும். முயற்சியின் மூலம் இன்றைய நாளை சாதகமான நாளாக ஆக்கிக் கொள்ளலாம். நிதி வளர்ச்சி சீராக காணப்படும்.இன்று கணிசமான தொகை சேமிப்பீர்கள்.இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும். மகரம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும் உங்களிடம் போதிய ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை காணப்படும். இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கும்பம்: இன்று சோம்பலான மனநிலையில் காணப்படுவீர்கள்.உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். மீனம்: இன்று சிறப்புடன் செயலாற்ற நம்பிக்கையும் புத்துணரச்சியும் தேவை. நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புகளும் அதிகம். தோள் வலி மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி