இன்றைய ராசிபலன்கள் (20/01/2024)

70645பார்த்தது
மேஷம்: இன்றைய நாள் சாதகமான பலன்களை அளிக்காது. முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். அமைதியற்றதாகவும் பாதுகாப்பற்தாகவும் உணர்வீர்கள். அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் உங்களை அதிகமாக செலவு செய்ய ஆட்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் மந்திரங்களை கூறுவதன் மூலமும் அமைதி பெறலாம். இன்று பயணங்கள் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சில வகை ஒவ்வாமை காரணமாக இன்று தொண்டையில் வலி ஏற்படலாம்.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு ஒரு சவாலான தினமாக இருக்கும். என்றாலும் இன்றைய நிகழ்வுகளிலிருந்து நீங்கள் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை சமாளிக்க சிறிய அளவில் கடன்களை வாங்குவீர்கள். இன்று ஆரோக்கியம் சிறந்து விளங்காது.

கடகம்: உங்கள் நீண்ட நாள் விருப்பம் இன்று நிறைவேறும். உங்கள் தனிப்பட்ட திறன் பலனளிக்கும். இன்று சிறந்த நிதிவளர்ச்சி காண்பீர்கள். நிதி சம்பந்தமாக விரைந்து முடிவெடுப்பீர்கள். இன்று திட ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

சிம்மம்: உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்த நாள். வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும். புத்துணர்ச்சி காரணமாக இன்று நீங்கள் திடமான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

கன்னி: இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். முன்னேற்றத்தில் தடை இருக்கும். பெரிய அளவில் யோசித்து இலட்சியத்தை அடைய வேண்டும். பூர்வீகச்சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இன்று ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்றாலும் சிறிய அளவில் முதுகுவலி பாதிக்கலாம்.

துலாம்: நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பலன்கள் இன்று கிட்டாது. இன்று அவசரமான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகள் காரணமாக பணம் கரையும். தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளும் தலைவலியும் இன்று காணப்படும்.

விருச்சிகம்: இன்று மிகச் சிறந்த நாள். ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். பணப்புழக்கம் அனுகூலமாகக் காணப்படும். அதே சமயத்தில் சில செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் சிறிது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தனுசு: இன்று மிகச்சிறந்த நாள். முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். சுய முன்னேற்றத்தின் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். நிதிநிலைமை மிகவும் முன்னேற்றகரமாக அதிக பணத்துடன் காணப்படும். உடற்பயிற்சியும் ஆற்றலும் உங்களை திருப்திகரமாக வைத்திருக்கும்.

மகரம்: இன்று சராசரி பலன்களே கிடைக்கும். பொறுமையும் உறுதியும் கடைபிடித்தால் இன்று நல்ல நாளாக அமையும். பணம் சம்பாதிப்பதற்கான மிதமான நிலையே பொதுவாக காணப்படுகின்றது. தலைவலி மற்றும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் காணப்படும்.

கும்பம்: இன்று உங்கள் இலட்சியங்களை அடைய சில வசதிகளை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய தினம் ஏற்புடையதல்ல. அதிகமான அளவில் பணம் காணப்படாது. குடும்பச் செலவினங்கள் ஏற்படும். தாயின் உடல் நிலை கவலை அளிக்கும்.

மீனம்: இன்று பிரகாசமான வளம் நிறைந்த நாள். தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். உங்கள் பணியிலிருந்து ஊக்கத் தொகை அல்லது இதர தொகை உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும். மனதிடம் காரணமாக ஆற்றல் நிறைந்து நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

தொடர்புடைய செய்தி