
மூன்றாவது நாளாக சரிவில் முடிந்த பங்குச் சந்தை
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவில் முடிவடைந்தன. சென்செக்ஸ் இறுதியில் 203.22 புள்ளிகள் (0.27 சதவீதம்) இழப்புடன் 75,735.96-ல் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இறுதியில் 19.75 புள்ளிகள் (0.09 சதவீதம்) இழப்புடன் 22,913.15-ல் நிறைவடைந்தது. அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி காரணமாக பங்குச்சந்தை சரிவடைந்ததாக கூறப்படுகிறது.