உளுந்தூர்பேட்டை - Ulundurpet

உளுந்தூர்பேட்டை: ஹார்டுவேர் கடையில் திருடிய ஆசாமி கைது

உளுந்தூர்பேட்டை: ஹார்டுவேர் கடையில் திருடிய ஆசாமி கைது

உளுந்துார்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அய்யாதுரை, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருவெண்ணைநல்லுார் சாலையில் கையில் இரண்டு சாக்கு பையுடன் சென்ற நபர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, உளுந்துார்பேட்டை, குளத்து மேட்டு தெரு முகமது முஸ்தபா என்கிற சரவணன், 49; என்பதும், தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் கதவை உடைத்து, 40 கிலோ இரும்பு பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். அவர் மீது உளுந்துார்பேட்டை பகுதியில் வீட்டை உடைத்து திருடிய 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி