திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிகள் சாா்பில் 17 பேருக்கு ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான கல்விக் கடன்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சேத்துப்பட்டு வட்டம், குடிசைகரை கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த மித்ரா என்ற மனவளா்ச்சி குன்றிய குழந்தைக்கு ரூ. 7, 900 மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா். மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் து. செந்தில்குமாரி, முன்னோடி வங்கி மேலாளா் கெளரி, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி எம். இளஞ்செழியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.