திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆர்ஜி சமுதாய கல்லூரியில் சமூக ஆர்வலர் தொடர் வண்டி சு. தனசேகரன் எழுதிய "என் தாய் வள்ளியம்மாள்" எனும் நூல் வெளியீட்டு விழா கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தன் கலந்து கொண்டு நூலை வெளியிட முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சி. பி. பாபு நூலை பெற்றுக்கொண்டார். வாழ்த்துரை எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக் கலைஞர் முத்தமிழ்ச் சங்கம் வந்தை குமரன் கேப்டன் பிரபாகரன் கு. சதானந்தன் வந்தை பிரேம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் நூலாசிரியர் தொடர்வண்டி சு. தனசேகரன் ஏற்புரை நிகழ்த்தினார்.