திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் இன்று (செப் 29) கருங்காலிகுப்பம் பெரிய ஏரியில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த செயல் விளக்கம் தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் தாசில்தார் சரளா மற்றும் பல்வேறு துறையினர் கலந்து கொண்டு ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டனர்.