வாரச்சந்தையில் விற்பனை அமோகம்

81பார்த்தது
வாரச்சந்தையில் விற்பனை அமோகம்
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று (செப் 29) நடந்த சந்தையில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் கண்டாச்சிபுரம், சோமாசிபாடி மற்றும் கொளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

மேலும், திருக்கோவிலூர், வீர பாண்டி, வைப்பூர், ஆவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள், மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் வாரச்சந்தை களை கட்டியது. நேற்று நடந்த சந்தையில் கறவை மாடு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலும், ஆடு 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் கோழி 1000 முதல் 2 ஆயிரம் வரையிலும் மற்றும் காளை மாடு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையில் விற்பனை ஆகி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். அதன்படி, நேற்று நடந்த சந்தையில் சுமார் 80 லட்சத்திற்கு மேல்
வர்த்தகம் நடந்தது.

தொடர்புடைய செய்தி