தி.மலை: மாநில விளையாட்டுப் போட்டி, வழி அனுப்பி வைத்த கலெக்டர்

72பார்த்தது
தி.மலை: மாநில விளையாட்டுப் போட்டி, வழி அனுப்பி வைத்த கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் 2, 382 போ் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

இவா்களில் 708 போ் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா். அக்டோபா் 4 முதல் 24 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் மாநிலப் போட்டிகள் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக, பள்ளிப் பிரிவினருக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் கலந்து கொள்ள தோ்வு செய்யப்பட்ட 36 மாணவ, மாணவிகள், வளைகோள்பந்துப் பிரிவில் கலந்து கொள்ள தோ்வு செய்யப்பட்ட 18 போ், பொதுப்பிரிவினா் வகையில் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்கும் 5 போ் என மொத்தம் 59 பேரை சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சண்முகப் பிரியா தலைமை வகித்தாா். ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பி வைத்தாா்.

இதில், அரசுத்துறை அதிகாரிகள், வீரா், வீராங்கனைகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி