புதிய வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி - அமைச்சர் தகவல்

68பார்த்தது
புதிய வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி - அமைச்சர் தகவல்
புதிய வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியில் திமுகவினர் முழுமையாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் எ. வ. வேலு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வரும் 1. 1. 2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி, 29. 10. 2024 28. 11. 2024 புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட முகாம்களில் அளிக்கலாம். புதிய வாக்காளர்களாக விண்ணப்பிக்க, புகைப்படம், வயது சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கவேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும்.

எனவே, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பணிக்குழு நிர்வாகிகள். வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி