திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே நம்பேடு ஏரியில் இன்று(செப்.29) சேத்துப்பட்டு தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பருமழை நீர்நிலை தேக்கத்தில் பேரிடர் காலத்திலும் பொதுமக்களை எவ்வாறு காத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இருந்து காத்து அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்று ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.