திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று (செப்.,16) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, கணினி சிட்டா திருத்தம், பாகப்பிரிவினை, ஆதரவற்ற விதவைச்சான்று, ஆற்று மணல் கொள்ளை, குடும்ப அட்டை, பிறப்புச்சான்று, புகார் மனு, பத்திரம் ரத்து, மூன்று சக்கர வாகனம் வழங்கக்கோரி, விவசாய கடன் வழங்கக்கோரி, வங்கி கணக்கு முடக்கம் செய்வதை தடுக்கக்கோரி என 33 பேர் மனு கொடுத்தனர். இம்மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.