

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தேதி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டலப் பாசனத்திற்கு வருகின்ற 27ஆம் தேதி டிசம்பர் மாதம் 9ம் தேதி வரை 135 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.