உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

58பார்த்தது
உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று(அக்.9) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கோயில் பகுதியில் கோயில் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி