திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹேமபிரசாத் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமித்தின் சார்பாக மாநில அளவிலான இளையோர் பிரிவு ஆக்கி அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது, இதில் மாணவன் வெற்றி பெற்று தற்பொழுது தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளான்.
இதைத்தொடர்ந்து மாணவன் டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய ஆக்கி போட்டியில் விளையாட உள்ளார். மாணவனை பள்ளி தலைமையாசிரியர் பாபு உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமரவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.