பா. ஜனதா திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம். எல். ஏ. தலைமையிலான குழு திருப்பூரில் ஆய்வு செய்தது. பின்னர் செல்வபெருந்தகை நிருபர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 35 சதவீத நிதி மத்திய அரசு வழங்குவதா கவும், 65 சதவீத நிதி தமிழக அரசு வழங்குவதாகவும், பயனா ளிகளின் வீடுகளில் முதல்வர் வழங்கும் நிதி குறித்து எழுத வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீத நிதி யும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்குகிறது. கூட்டணி விசுவாசத்துக்காக மக்களிடம் பொய்யான பிம்பத்தை ஏற்ப டுத்த தனது பொதுக்கணக்கு குழு தலைவர் பொறுப்பை தவறாக உபயோகப்படுத்தி உள்ளதால் அந்தப் பொறுப்பின் கண்ணியத்தை செல்வபெருந்தகை இழந்துள்ளார். இந்த செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்து பொது கணக்கு குழுவின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து பதவி விலக வேண் டும் என்று வடக்கு மாவட்ட பா. ஜனதா கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.