திருப்பூர் மாநகரில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 25 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய முக்ரம் நுண்ணரிவு பிரிவிற்கும், வீரபாண்டி போலீஸ் நிலைய நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய ஜெயசந்திரன் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், நல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய செந்தில்குமார் வீரபாண்டி போலீஸ் நிலைய நுண்ணறிவு பிரிவிற்கும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னமுருகன் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல் கே. வி. ஆர். நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார், கொங்குநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாரும் மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 25 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.