திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. எனவே மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.