திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி விவசாயிகள் தென்னங்கன்றுகள் வாங்க தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெட்டை ரக தென்னங்கன்றுகள் கன்று ஒன்றுக்கு ரூ. 65க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சுமார் 1700 தென்னங்கன்றுகள் தற்பொழுது உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.