திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலையில் மீன் இறைச்சி விற்பனை கடைகள் அதிகளவு உள்ளன இங்கு அமராவதி அணை பவானிசாகர் அணை ஆழியாறு அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளின் மீன்கள் மற்றும் கடல் மீன்களும் ஆடு, மாடு, கோழி இறைச்சிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் என்பதால் மீன் இறைச்சி விற்பனை வெகுவாக குறைந்துதுள்ளது. இதனால் மீன் இறைச்சி மார்க்கெட் கூட்டம் இன்றி காணப்பட்டது தினமும் 500 கிலோ மீன் விற்பனையாகும் நிலையில் நேற்று (செப்-28) 200 கிலோவுக்கும் குறைவாக மீன் விற்பனை ஆனது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.